தாம்சன் – ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதையின் முதல் 3 நிலையங்கள் திறப்பு; உட்லேண்ட் வாசிகள் மகிழ்ச்சி..!

Thomson-East Coast Line open
The Woodlands North station is among the biggest of the 32 stations on the Thomson-East Coast Line. (PHOTO: KUA CHEE SIONG)

Thomson-East Coast Line open : தாம்சன் – ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதையின் முதல் மூன்று நிலையங்கள் முன்னோட்டத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் சேவையை (ஆர்.டி.எஸ்) இணைக்கும் உட்லேண்ட்ஸ் நார்த் எம்.ஆர்.டி நிலையம் நேற்று பொதுமக்களின் பார்வைக்கு முதன்முறையாக திறந்துவிடப்பட்டன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் உச்சிமாநாடு – 300க்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் பங்கேற்பு..!

தொடக்கத்தில், குறைவான பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால், உட்லேண்ட்ஸ் நார்த் முதல் உட்லேண்ட்ஸ் சவுத் ஸ்டேஷன்கள் வரை ரயில்கள் உச்ச நேரங்களில் 10 நிமிடங்கள் மற்றும் பிற நேரங்களில் 15 நிமிடங்கள் இயக்கப்படும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அமைக்கப்பட்டு வரும் 32 நிலையங்களில் மிகப்பெரிய நிலையங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

இந்த ரயில் நிலையங்களில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி முதல் முழுமையான சேவைகள் தொடங்கும்.

சிங்கப்பூரின் 6வது MRT வழித்தடமான தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இதன் சேவை 43 கி.மீ. வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 50 பிரபல சுற்றுலா மையங்கள்; தமிழக சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு..!

மேலும், 2024-ம் ஆண்டில் இது முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உட்லேண்ட்ஸ் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதனை வரவேற்றனர்.