COVID -19 தாக்கத்திலிருந்து மீண்டு வர தேசிய சேமிப்பிலிருந்து மேலும் $31 பில்லியன் நிதி..!

(Photo: Yahoonews)

சிங்கப்பூர் மக்களும், பொருளியலும் COVID -19 கிருமித்தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வர 4வது வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய சேமிப்பிலிருந்து மேலும் $31 பில்லியன் நிதி எடுக்கப்படுகிறது, இதுவரை மொத்தம் $52 பில்லியன் நிதி தேசிய சேமிப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 533 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!

இரு முறை நாட்டின் சேமிப்பிலிருந்து இரண்டு மாதங்களாக பெறும் நிதியின் மூலம் சிங்கப்பூரின் பொருளியல் மீது கிருமித்தொற்று எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணரலாம் என்று ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

COVID -19 நெருக்கடியின் அசாதாரண தன்மையால் இந்த தேவை எழுந்துள்ளது. தேசிய சேமிப்பிலிருந்து மீண்டும் நிதி பெறும் முடிவு குறித்து துணை பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளார்.

தேசிய சேமிப்பில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு வெள்ளியும் கடந்த ஆண்டு மிக்க கவனமாகச் சேர்ந்தவை, இதை இப்போது செலவிடும் சூழ்நிலையில் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 700-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!