சிங்கப்பூரில் மேலும் 31 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று இல்லாத இடங்களாக அறிவிப்பு..!

(Image: Singapore Ministry of Manpower/ Facebook)

சிங்கப்பூரில் மேலும் 31 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள், COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லாத இடங்களாக மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது.

அந்த 31 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சுமார் 3,700 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில், இந்தியர் COVID-19 தொற்றில் இருந்து மீண்டு பின்பு உயிரிழந்தார் – சுகாதார அமைச்சகம்..!

COVID-19 தொற்று இல்லாத மொத்த வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 79,000 ஆக உள்ளது. ஜூன் 22 நிலவரப்படி, அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தங்குமிட வசதிகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சமீபத்திய 31 தங்கும் விடுதிகளில், 27 ஊழியர்கள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நான்கு தற்காலிக கட்டுமான தளங்கள் அடங்கும்.

மூன்று தங்கும் விடுதிகளில், குணமடைந்த ஊழியர்களுக்கான நான்கு புளோக்குகளிலும் COVID-19 கிருமித்தொற்று இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மொத்தம் 163 தங்கும் விடுதிகள் மற்றும் குணமடைந்த ஊழியர்களுக்கான 18 புளோக்குகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை என்று MOM தெரிவித்துள்ளது.

163 தங்கும் விடுதிகளில், 106 விடுதிகளில் ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்க தேவையான மூன்று நடவடிக்கைகளை முடித்துள்ளன. குணமடைந்த ஊழியர்களுக்கான 18 புளோக்குகளில் எட்டு புளோக்குகள் அவ்வாறு செய்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg
Verified by MonsterInsights