சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை..!

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கவலை தெரிவித்த போக்குவரத்து அதிகாரிகள் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மொபைல் போன்கள் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் வேக கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு அபராதமும், குற்றப் புள்ளிகளும் விதிக்கப்பட்டன.

குறிப்பாக, மொபைல் போனை பயன்படுத்தி கொண்டு வாகனத்தை ஓட்டியவருக்கு சுமார் 200 வெள்ளி அபராதமும், 6 குற்றப் புள்ளிகளும் வழங்கப்பட்டது.

கூடுதலாக தலைக்கவசத்தின் கண்ணாடி முகத்திரை தெளிவாக இல்லாத காரணத்தால் இருசக்கர வாகன ஓட்டிக்கு 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

போக்குவரத்து போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 34 குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டு அபராதம் மற்றும் குற்றப் புள்ளிகள் விதிக்கப்பட்டன என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.