சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த பயணி கைது..!

37-year-old man arrested after taxi driver robbed in Woodlands
37-year-old man arrested after taxi driver robbed in Woodlands

சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரிடம் பயணி ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டதை தொடர்ந்து, 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் உட்லேண்ட்ஸ் டிரைவ் 75இல் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய ஐந்து பேருக்கு கிருமித்தொற்று உறுதி..!

அதாவது 61 வயதான டாக்ஸி ஓட்டுனரிடம் இருந்து நேற்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டாக்ஸிக்குள் சுமார் S$80 கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் விசாரணைகள் மூலமாகவும், காவல்துறை கேமராக்களின் உதவியுடனும், உட்லேண்ட்ஸ் காவல் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு நான்கு மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபரிடமிருந்து மொத்தம் S$42 மீட்கப்பட்டது, அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மற்ற திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்தனர்.

அந்த நபர் மீது நீதிமன்றத்தில், நாளை திங்கள்கிழமை திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மூன்று முதல் 14 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg