சிங்கப்பூரில் மேலும் 384 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 முற்றிலும் இல்லை..!

384 more foreign worker dorms cleared of COVID-19: MOM
384 more foreign worker dorms cleared of COVID-19: MOM (Photo: TODAY)

சிங்கப்பூரில் மேலும் 384 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 முற்றிலும் இல்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தெரிவித்துள்ளது.

இதில் 345 தங்கும் இடங்களாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 38 தற்காலிக கட்டுமான தளங்கள் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் புதிதாக 26 இடங்கள் சேர்ப்பு – சுகாதார அமைச்சகம்..!

நேற்றைய நிலவரப்படி, சுமார் 180,000 ஊழியர்கள் குணமடைந்துள்ளனர் அல்லது கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக MOM செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 87,000ஆக இருந்த அந்த எண்ணிக்கையானது, தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.

கூடுதலாக, குணமடைந்தோருக்கான 5 தங்கும் விடுதிகளில், 23 ப்ளாக்குகளில் தொற்று இல்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

COVID-19 முற்றிலும் இல்லா தங்கும் விடுதிகளின் மொத்த எண்ணிக்கை 625 என்றும், 17 குணமடைந்தோருக்கான தங்கும் விடுதிகளில் மொத்தம் 44 ப்ளாக்குகளில் தொற்று இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg