சிங்கப்பூரின் 3D வரைபடத்தைப் பயன்படுத்த நிறுவனங்கள் விருப்பம்!

Photo: www.onemap3d.gov.sg/

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத் துறை என்பது மிக முக்கியமானது. இந்த துறையில் அதிகளவில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றன. சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு தொழிலாளர்களும் கட்டுமானத் துறையில் அதிகளவில் பணியாற்றி வருகின்றன. அதேபோல், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நொடிக்கு நொடி வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதனால் கட்டுமானம், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து விதமான சேவைகளையும் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மொழியை வருங்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க அயராது பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

அந்த வகையில், சிங்கப்பூர் நில ஆணையம் (Singapore Land Authority- ‘SLA’) சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ தேசிய வரைபடமான OneMap- ல் முழுமையான ஒருங்கிணைந்த 3D வரைபடத்தை வெளியிட்டுள்ளது. https://www.onemap3d.gov.sg/main/ என்ற சிங்கப்பூர் நில ஆணையம் உருவாக்கியுள்ள இணையதளப் பக்கத்திற்கு சென்று, முகவரியைக் குறிப்பிட்டால் 3D வரைபடம் உங்கள் முன் தோன்றும். சிங்கப்பூரின் சான்றளிக்கப்பட்ட தேசிய வரைபடமாகும். இது சிங்கப்பூரின் நிலப்பரப்பில் சமீபத்திய மற்றும் மிக விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது. பல அரசு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் ஒரு தயாரிப்பு, வரைபடத்தின் சேவைகளை இலவசமாக அணுகலாம்.

‘OneMap3D’ என்ற பயன்பாடு Singapore Geospatial Festival 2021- ல் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் முப்பரிமாண வரைப்படம் எனப்படும் இந்த 3D வரைபடத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள 20- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. வரைபடத்தைத் தங்கள் இணையதளப் பக்கத்தில் சேர்த்துக் கொள்ள சில பெரிய சொத்துச் சந்தை நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் கூறுகின்றன.

சிமெண்ட் லாரியில் சிக்கிய 37 வயது ஆடவர் மரணம்

3D வரைபடத் தொழில் நுட்பம் தற்போது வந்துள்ளதால், 2D எனும் வழக்கமான வரைபடம் இனி அதிகம் தேவைப்படாது. சிங்கப்பூர் நில ஆணையம் பொருள் விநியோகம் செய்யும் ‘Ninja Van’ என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டு வருகிறது. இதன் நோக்கம், முப்பரிமாண வரைபடத்தில் இன்னும் துல்லியமான தகவல்களைச் சேர்ப்பது ஆகும்.