சிங்கப்பூரில் 4 புதிய COVID-19 சம்பவங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டியது..!

சிங்கப்பூரில் நான்கு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (பிப்ரவரி 29) அன்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் மூலம் சிங்கப்பூரில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டி தற்போது 102ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது உயிரிழந்த இந்திய வம்சாவளி ஆணழகன் பிரதீப் குறித்த அறிக்கை..!

மேலும் மூன்று நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் (சம்பவம் 20, 68 மற்றும் 75), இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 72ஆக உள்ளது.

கூடுதலாக உறுதிப்படுத்தப்பட்ட 30 நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்ட நான்கு புதிய சம்பவங்கள், விஸ்லெர்ன் டெக்னாலஜிஸ் (Wizlearn Technologies) உடன் தொடர்புடையது. அவர்களில் யாரும் சமீபத்தில் சீனா, Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு செல்லவில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சோதனை; பெண் கைது..!

சம்பவம் 99

இதில் உறுதிப்படுத்தப்பட்டவர், ஜூராங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 81ல் வசிக்கும் 27 வயது சிங்கப்பூர் ஆடவர்.

தற்போது இவர் தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் 100

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், ஹாலண்ட் அவென்யூவில் வசிக்கும் 20 வயதான மலேசிய ஆடவர். இவருக்கு சம்பவம் 93 உடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இவரும் தற்போது தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் 101

இதில் 101வது சம்பவமாக உறுதிப்படுத்தப்பட்ட நபர், 61 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவருக்கு சம்பவம் 93 உடன் தொடர்புள்ளது.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 102

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 102வது நபர் 41 வயது பிலிப்பீன்ஸ் நாட்டுப் பெண், இவர் சம்பவம் 101-இல் பாதிக்கப்பட்டவரின் வீட்டுப் பணிப்பெண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.