வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட நான்காவது நபரை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

4th confirmed case of Wuhan virus in Singapore: MOH (Photo: Sengkang General Hospital)

4th confirmed case of Wuhan virus in Singapore: வூஹான் வைரஸ் பாதிக்கப்பட்ட நான்காவது நபரை சிங்கப்பூர் உறுதி செய்துள்ளது, என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் வூஹானைச் சேர்ந்த 36 வயதான ஆடவர், கடந்த புதன்கிழமை தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்துள்ளார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு வூஹான் வைரஸ்…!

“அவர் தற்போது செங்காங் பொது மருத்துவமனையில் (SKH) ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரின் பயணத்தின் போது வூஹான் வைரஸின் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை, அதன் பிறகு வில்லேஜ் ஹோட்டல் சென்டோசாவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; “அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” – பிரதமர் லீ…!

அவருக்கு கோரோனா கிருமி தொற்று இருப்பது, சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு மூன்று பேருக்கு, அதாவது இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.