சிங்கப்பூரில் 1.3 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருள் பறிமுதல்; 5 பேர் கைது..!

5 arrested, more than 1.3kg of heroin seized in CNB operation (Photo: CNB)

Heroin seized in CNB operation in Singapore : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 1.3 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) கைப்பற்றியுள்ளது.

அதிகாலை பெண்டிமீர் சாலை மற்றும் கெய்லாங் பஹ்ரு சாலை சந்திப்புக்கு அருகே இந்த அதிரடி சோதனை நடவடிக்கை தொடங்கியது, இந்த சோதனையில் CNB அதிகாரிகள் 72 வயதான நபரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : பிலிபைன்ஸ் எரிமலை வெடிப்பு காரணமாக சிங்கப்பூர் விமான சேவை பாதிப்பு..!

பின்னர் சந்தேகத்திற்கிடமான அந்த நபரிடம், 845 கிராம் போதைப்பொருள், 32 கிராம் ஐஸ் மற்றும் S$5,350 ரொக்கம் இருந்தாக CNB வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து, ப்ரோம் (Prome) சாலையில் மறைந்திருந்த 55 வயது வெளிநாட்டை சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அங்கே சுமார் 88 கிராம் போதைப்பொருள் அடங்கிய 10 பிளாஸ்டிக் சிறுபைகளையும், பல்வேறு போதைப் பொருள்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் கெய்லாங் பஹ்ரு சாலை அருகே இரண்டு சந்தேகத்திற்கிடமான மலேசிய நபர்கள், அதாவது 26 வயது இளைஞன் மற்றும் 24 வயது பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மலேசிய இளைஞர் சுமார் 422 கிராம் போதைப்பொருள் வைத்திருந்தார் என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த விசாரணையைத் தொடர்ந்து, மற்றொரு சந்தேகத்திற்கிடமான 64 வயது நிரம்பிய சிங்கப்பூர் நபர், ஜுராங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21-ல் உள்ள void deckல் கைது செய்யப்பட்டார், அவரிடம் இருந்து மொத்தம் S$2,200 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேர் கைது..!

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு சுமார் S$ 100,000 என்று தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான அனைத்து நபர்களிடமும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் சுமார் 645 போதைப்புழங்கிகள் ஒரு வாரம் பயன்படுத்தப் போதுமானது என்று CNB தெரிவித்துள்ளது.

Source : CNA