சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு (COVID-19) கொரோனா வைரஸ்; ஐந்து பேர் குணமடைந்துள்ளனர்..!

5 more COVID-19 patients discharged in Singapore
5 more COVID-19 patients discharged in Singapore, 1 new confirmed case: MOH

சிங்கப்பூரில் மேலும் ஐந்து COVID-19 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) பிப்ரவரி 25 அன்று தெரிவித்துள்ளது.

கிரேஸ் அசெம்பிளி ஆப் காட் தேவாலயத்துடன் தொடர்புடைய 58, 62 மற்றும் 81 ஆகிய சம்பவத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

வீடு திரும்பிய மற்ற இரண்டு நோயாளிகள் 77 மற்றும் 91 சம்பவத்தில் உறுதி செய்யப்பட்டவர்கள்.

இதன் மூலம் முழுமையாக குணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் மருத்துவமனையில் உள்ள 33 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில், பெரும்பாலானவை சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

புதிய சம்பவம்

இதனிடையே 91வது உறுதிப்படுத்தப்பட்ட புதிய சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட இந்த புதிய நபர், 58 வயதான சிங்கப்பூர் பெண். சீனாவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று MOH வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சுகாதார அமைச்சகத்தால் பிப்ரவரி 18 அன்று தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு (NCID) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு COVID-19 வைரஸ் தொற்று – தூதரகம்..!

Source : CNA