தோ பாயோவில் தீ விபத்து: 50 பேர் வெளியேற்றம்

Singapore Civil Defence Force/FB

தோ பாயோவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று (ஆகஸ்ட் 12) இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதனை அடுத்து சுமார் 50 பேர் அந்த இடத்தில இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

நேற்று இரவு 8.20 மணியளவில் பிளாக் 222 Lorong 8 Toa Payohல் ஏற்பட்ட தீ குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) Facebook பதிவில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர்களின் திறமைக்கு இனி தனி மதிப்பு… 20,000 ஊழியர்கள் முதல் இலக்கு!

மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் இருந்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது என்றும், அடர்த்தியான கரும் புகை வெளியேறியதாகவும் SCDF கூறியது.

“இந்த தீயை அணைக்க இரண்டு தண்ணீர் ஜெட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன,” என்றும் SCDF கூறியது.

போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

புகையை உள்ளித்ததாக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

ஆறுமுகம் சாலையில் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது