சிங்கப்பூரில் 5,700 ஊழியர்கள் வேலைக்கு மீண்டும் திரும்ப தடை..!

5,700 workers have yet to be scheduled for COVID-19 rostered routine testing
5,700 workers have yet to be scheduled for COVID-19 rostered routine testing (Photo: Reuters)

சிங்கப்பூரில் மொத்தம் 5,700 ஊழியர்கள் தற்போது வேலைக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் நேற்றைய (செப்டம்பர் 18) நிலவரப்படி கட்டாய COVID-19 வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படாத காரணத்தால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த வாரம் 13,000ஆக இருந்தது, தற்போது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM), கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA), பொருளியல் வளர்ச்சிக் கழகம் (EDB) மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) ஆகியவை கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன.

அந்த ஊழியர்களுக்கு, AccessCode என்னும் அணுகல் குறியீடு ‘சிவப்பு’ நிலையில் நீடிக்கும், அதன் காரணமாக அவர்கள் வேலைக்குத் திரும்ப முடியாது.

மேலும், அந்த ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவுடன், அவர்களின் AccessCode ‘பச்சை’ நிலைக்கு மாறிவிடும், அதன் பின்னர் அவர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்.

கடந்த ஆகஸ்ட் முதல், செப்டம்பர் 5 காலக்கெடுவுக்கு முன்னர் தங்கள் ஊழியர்களை வழக்கமான சோதனைக்கு உட்படுத்துமாறு, அதிகாரிகள் முதலாளிகளை நினைவூட்டி வருகின்றனர்.

அதாவது HPBஇன் Swab Registration System சோதனைப் பதிவு முறை மூலமாக முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு பரிசோதனைகள் செய்ய விண்ணப்பிக்க தொடர்ந்து அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…