சிங்கப்பூருக்கு வந்து திருட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்

6 Australian schoolgirls arrested shoplifting return home
Facebook/Bacchus Marsh Grammar and Google Maps

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள Victoria’s Secret மற்றும் Crocs கடைகளில் திருடியதற்காக கைது செய்யப்பட்ட 6 ஆஸ்திரேலிய சிறுமிகள் மீண்டும் மெல்போர்ன்க்கு அனுப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள் கடந்த நவ.13 அன்று சிங்கப்பூருக்கு பள்ளிப் பயணமாக வந்துள்ளனர்.

முதல் “பஸ்-ஸ்டாப் ஜிம்”… காத்திருக்கும் நேரத்தை இனி வீணடிக்க வேண்டாம்.. ஒர்க் அவுட் செய்து ரீசார்ஜ் பெறுங்கள்!

இதனை அடுத்து, ஆர்ச்சர்ட் சாலையில் கடையில் திருடியதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் மெல்போர்னுக்கு வடக்கே அமைந்துள்ள Bacchus Marsh Grammar என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் படிக்கும் பள்ளியில் வருடாந்திர கட்டணம் A$13,000 (S$11,995) என்றும் NCA Newswire தெரிவித்துள்ளது.

செய்தி அறிக்கைகளின்படி, அவர்கள் மாண்டரின் கேலரியில் உள்ள விக்டோரியாஸ் சீக்ரெட் கடையில் இருந்தும், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள Crocs கடையிலிருந்தும் பொருட்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள் தங்கள் பள்ளி நண்பர்களுடன் கடந்த நவம்பர் 19, சனிக்கிழமையன்று சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் மெல்போர்ன்க்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… கழிவறையில் பொட்டலம் – 2 தங்க கட்டிகள்: போலீசார் விசாரணை