சிங்கப்பூரில் COVID-19 சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கையின் போது ஒன்றுகூடிய 7 வெளிநாட்டவர்களுக்கு அபராதம்..!

7 people fined over social gatherings at Robertson Quay during COVID-19 circuit breaker
7 people fined over social gatherings at Robertson Quay during COVID-19 circuit breaker

COVID-19 விதிமுறைகளை மீறியதற்காகவும், ராபர்ட்சன் கீ பகுதியில் கூட்டங்களை நடத்தியதற்காகவும் ஏழு பேருக்கு வியாழக்கிழமை (ஜூன் 25) S$8,000 முதல் S$9,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த ஏழு பேர் இரண்டு குழுக்களைக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறை மற்றும் பிரம்படி..!

4 ஆடவர்கள் மது குடித்துவிட்டு அரட்டையடிக்க ஒன்றன்பின் ஒன்றாக 3 கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் 4 பேரும் பிரிட்டிஷ் குடிமக்கள், கேளிக்கை விடுதிகளுக்கு சென்ற அவர்களுக்கு தலா S$9,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மற்ற மூன்று பேர், திருமணமான அமெரிக்க தம்பதி மற்றும் ஆஸ்திரேலியர் ஒருவர் ஆகியோருக்கு தலா S$8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Photo: Nuria Ling / TODAY

COVID-19 விதிமுறைகளை மீறிய ஏழு பேரும் நியாயமான காரணமின்றி ஒருவருக்கொருவர் சந்தித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

COVID-19 விதிகளை மீறி மற்றவர்களைச் சந்தித்த குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : உணவகங்களில் மற்றவர்களுடன் பேசும் போது முகக்கவசம் அகற்ற அனுமதி இல்லை – MOH..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg