சிங்கப்பூரில் ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு – 7,000 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

migrant workers dormitory need time check
(Photo: Reuters / Edgar Su)

கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சுமார் 100 புதிய COVID-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த புதிய பாதிப்புகள் காரணமாக சுமார் 7,000 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

அவர்களில் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று MOM மற்றும் MOH தெரிவித்துள்ளது.

இந்த புதிய பாதிப்புகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், மேலும் சில ஊழியர்கள் தங்கள் வேலைகளுக்கு திரும்பியதாகவும் அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், புதிதாக COVID-19 பாதித்த நபர்களை தனிமைப்படுத்தவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய தொடர்புகளைக் கண்டுபிடிக்கவும், தனிமைப்படுத்தவும் தேவையான துரித நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதுவரை, 60 சதவீதத்திற்கும் அதிகமான தொற்று பாதித்த நபர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சம்பளக் குறைப்பு காரணமாக 35 முதல் 44 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் கடுமையாக பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg