“10 வயது சிறுவன் மற்றும் 73 வயது பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 24- ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் 10 வயது சிறுவனை காணவில்லை. இவர் கடைசியாக, எண்.10 வின்ஸ்டேட்ட் ரோட்டில் (No.10 Winstedt Road) காணப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் சிக்கிய சிகரெட்டுகள்! – வரி செலுத்தப்படாத பொட்டலங்கள் பறிமுதல்!

அப்போது, சிறுவன் பச்சை நிற ஸ்லீவ் சட்டை (wearing short sleeve green shirt with camouflage sleeves) மற்றும் நீல நிற ஷார்ட்ஸை அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) சிறுவன் இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைப்பேசி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது காவல்துறை.

அதேபோல், சிங்கப்பூர் காவல்துறையின் மற்றொரு ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 73 வயது பெண்ணை நவம்பர் 24- ஆம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 73 லோர் 4 டோவா பயோஹ் மார்க்கெட் பகுதியில் (Blk 73 Lor 4 Toa Payoh market area) காணப்பட்டுள்ளார். அப்போது, நீல நிற ஆடை அணிருந்திருந்த அவர், கையில் கருப்பு நிற பையுடன் இருந்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனத்துடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

இந்த பெண்ணை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) தகவல் கிடைத்தாலோ உடனடியாக 999 என்ற சிங்கப்பூர் காவல்துறையின் தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள் விடுக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவுடன், காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.