சிங்கப்பூரில் மேலும் 8 புதிய நபர்கள் COVID-19 தொற்றுநோயினால் பாதிப்பு..!

8 new COVID-19 cases confirmed
8 new COVID-19 cases confirmed, 8 more patients discharged from hospital: MOH (Photo: Mothership)

சிங்கப்பூரில் மேலும் எட்டு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி (மார்ச் 7) செய்யப்பட்டுள்ளன.

இந்த சமீபத்திய நோய்த்தொற்றுடன் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 138ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பற்றி கூறி சிங்கப்பூர் மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய இருவர் கைது..!

குணமடைந்தோர்

மேலும் எட்டு COVID-19 நோயாளிகள் சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனுடன் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உள்ளது.

இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 48 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

இந்த புதிய சம்பவங்களில் நான்கு பேர், சஃப்ரா ஜுராங் வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்று ‘தி லைஃப் சர்ச் மற்றும் மிஷன்ஸ்’ சிங்கப்பூருடன் தொடர்புடையது, அதே நேரத்தில் இரண்டு இறக்குமதி சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

மேலும், மீதமுள்ள சம்பவம் யாருடனும் தொடர்பில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொது மருத்துவமனை வார்டுக்குள் COVID-19 தொற்று பரவுகிறதா? – சுகாதார அமைச்சகம் விசாரணை..!