80 விமானிகளை விடுப்பில் அனுப்பிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

Photo: SpiceJet

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் (SpiceJet). குறிப்பாக, இந்தியாவில் முக்கிய நகரங்களில் இருந்து அந்தமான், கோவா, மும்பை, அகமதாபாத், சென்னை, டெல்லி, காஷ்மீர், ஹைதராபாத், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வந்தது. மேலும், பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஸ்பைஸ்ஜெட் என்றால் மிகையாகாது.

இந்திய அமைச்சர்களுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் சந்திப்பு!

இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக நடவடிக்கையாக 80 விமானிகளுக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு அளித்துள்ளது. செலவைக் குறைப்பதற்காக இந்த தற்காலிக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், யாரையும் வேலையைவிட்டு அனுப்பவில்லை என்றும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 784 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் இந்த நிலையில் இருந்தால் சிறை நிச்சயம்: சிங்கப்பூர் to திருச்சி… சிக்கிய ஊழியருக்கு சிறை

இந்த திடீர் நடவடிக்கை குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானி ஒருவர் கூறுகையில், “விமான நிறுவனம், இந்த திடீர் முடிவை எடுத்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை வழங்கப்படுமா என்பது உறுதியாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.