சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் புதிய சம்பவங்களில் 73 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள்..!

87 new COVID-19 cases in Singapore, including 14 imported infections
87 new COVID-19 cases in Singapore, including 14 imported infections

சிங்கப்பூரில் நண்பகல் (செப்.11) நிலவரப்படி, புதிதாக 87 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 57,316ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு பேருந்துகள் பறிமுதல் – LTA

புதிய சம்பவங்களில், 73 பேர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள், அவர்களில் 33 பேர் Avery Lodge தங்கும் விடுதியை சேர்ந்தவர்கள், அவர்களில் பெரும்பாலோர் முன்னதாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள சம்பவங்கள் கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியப்பட்டன என்று MOH தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 14 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிங்கப்பூருக்கு வந்த உடனே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் தங்க வைக்கப்பட்டனர்.

கூடுதல் விவரங்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புல் வெளியில் கிடந்த iPhone-ஐ திருப்பி கொடுக்காமல் வைத்துக்கொண்டவருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts