சிங்கப்பூரில் மேலும் 95 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!

(Photo: NY Times)

சிங்கப்பூரில் மேலும் 95 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 தொற்று முற்றிலும் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் மொத்தம் 975 தங்கும் விடுதிகள் COVID-19 அபாயம் நீங்கிய பகுதிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளன என்று மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமை (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

இதில் 78 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 16 தற்காலிக கட்டுமான விடுதிகள் ஆகியவை அடங்கும் என்று மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

மேலும், குணமடைந்த ஊழியர்களுக்கான 6 தங்குமிடங்களில் உள்ள 12 ப்ளாக்குகளில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குணமடைந்த ஊழியர்களுக்கான இந்த ப்ளாக்குகளில் ஒன்று Kian Teck Hostel, அதாவது அந்த முழு விடுதியும் தற்போது COVID-19 அபாயம் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 17 குணமடைந்த ஊழியர்களுக்கான விடுதிகளில் 64 ப்ளாக்குகளும் மற்றும் 975 தங்கும் விடுதிகளும் COVID-19 அபாயம் நீங்கிய பகுதிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளன என்று MOM தெரிவித்துள்ளது.

85% ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இல்லை

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சுமார் 262,000 வெளிநாட்டு ஊழியர்கள் (ஏறத்தாழ 85 சதவீதம்) கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர் அல்லது அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 247,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg