“சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு மீண்டும் பற்றுச்சீட்டுகள்”- நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

Social gatherings 5 allowed
Pic: Mothership

சிங்கப்பூர் நிதியமைச்சகம் (Ministry Of Finance, Singapore) நேற்று (30/09/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் (Housing Board Flats) வசிக்கும் சுமார் 9,50,000 சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு தற்போதைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான யு-சேவ் (U-Save) மற்றும் சேவைப் பராமரிப்பு கட்டணத் தள்ளுபடிகளும் (Goods and Services Tax Voucher- ‘GSTV’)உள்ளடக்கிய பற்றுச்சீட்டுகள் அக்டோபர் மாதம் வழங்கப்படும்.

போலியான பண நோட்டுகளை நண்பர் உதவியுடன் தயாரித்த ஆடவருக்கு 5 ஆண்டு சிறை

யு-சேவ் பற்றுச்சீட்டுக்கான மதிப்பு 110 சிங்கப்பூர் டாலர் முதல் 190 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும். யு-சேவ் மற்றும் ஜிஎஸ்டி கட்டணத் தள்ளுபடிகள் அரை மாதத்தில் இருந்து ஒரு மாதம் வரை இருக்கும். ஜிஎஸ்டி வரி உயர்வை குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட சிங்கப்பூரர் குடும்பங்கள் சமாளிக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நான்காவது தவணை பற்றுச்சீட்டுகள் வரும் 2023 ஜனவரியில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பங்கள் ஆண்டுக்கு ஒன்றரை மாதம் முதல் மூன்றரை மாதங்கள் வரையில் ஜிஎஸ்டி கட்டணத் தள்ளுபடியைப் பெறுவார்கள். கடந்த நிதியாண்டில் இருந்து இந்த நிதியாண்டு வரை யு-சேவ் கட்டண தள்ளுபடி இரண்டு மடங்காகியுள்ளது.

பாதசாரி மீது மோதிய பேருந்து – கவனக்குறைவாக இயக்கிய ஓட்டுநர் கைது

அதன்படி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் ஒரு அறை மற்றும் இரண்டு அறைகள் கொண்ட வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு எட்டு முதல் பத்து மாதங்கள் வரை பயனீட்டு கட்டணத்தில் சலுகைகள் கிடைக்கும்.

இந்த இரு சலுகைகளுக்காக, நடப்பு நிதியாண்டில் மட்டும் சிங்கப்பூர் அரசு சுமார் 720 மில்லியன் சிங்கப்பூர் டாலரை செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யு-சேவவ் மற்றும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.gstvoucher.gov.sg/ என்ற சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.