புற்றுநோயால் அவதிப்படும் வெளிநாட்டு ஊழியர்; கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூரர்கள்..!

A Bangladeshi worker is dying from cancer. Singaporeans made sure he got his last wish to go home
A Bangladeshi worker is dying from cancer. Singaporeans made sure he got his last wish to go home (Photo: Cynthia Goh)

ராணா சிக்தர் என்ற 34 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் ஏற்கனவே வயிற்று புற்றுநோயுடன் (stomach cancer) தனது வாழக்கையில் போராடி வருகிறார்.

சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டும் ஊழியரான அவர், தனது வீட்டிற்குச் சென்று தன்னுடைய இறுதி நாட்களை தனது மனைவி மற்றும் ஆறு வயது மகனுடன் கழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : குறிப்பிட்ட சில சேவைகளை மீண்டும் தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர்..!

ஆனால், பங்களாதேஷில் COVID-19 ஊரடங்கு காரணமாக கடந்த மே 19 அன்று அவரது விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவருக்கான விமானச் சேவைகள் மீண்டும் ஜூன் மாதம் 10ம் தேதிதான் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

அவருடைய நிலை மிகவும் மோசமாக இருந்தது என்றும், மே மாத இறுதி வரை அவர் பிழைப்பதே கேள்வி குறியாக இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தன்னுடைய 17 வயதிலிருந்து சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தமது குழுவின் ஆலோசனைப்படி, தேசிய புற்றுநோய் மைய சிங்கப்பூரின் (NCCS) டாக்டர் சிந்தியா கோ, தனியார் மருத்துவ விமானம் மூலம் திரு சிக்தரை அவர் நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தார்.

மூன்று நாட்களில், அவருக்கு உதவி செய்யும் நோக்கில் நன்கொடையாளர்கள் மூலம் சுமார் S$60,000 திரட்ட முடிந்தது.

பல தடைகளைத் தாண்டி சிக்தர், மே 22 மாலை ஒரு தனியார் ஜெட் விமானத்தில் உதவியுடன், அதாவது நோன்புப் பெருநாளுக்கு முன்தினம் தமது குடும்பத்துடன் பங்களாதேஷில் ஒன்றுசேர்ந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 60,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் இடவசதிகள்..!