சிங்கப்பூரில் பரவிவரும் ஒரு போலியான செய்தி – யாரும் நம்பவேண்டாம்..!

A fake news that is currently in circulation

சிங்கப்பூரில் வசிப்பவர்களை ஆன்லைன் மூலம் சில மோசடி கும்பல் குறிவைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறிக்க காத்திருக்கிறது. இது குறித்து சிங்கப்பூர் அரசு பல எச்சரிக்கை செய்தாலும், செவிசாய்க்காத சிலர் அதில் தாமாகவே சிக்கிவிடுகின்றனர். இவ்வாறான மோசடிகள் ஒரு போலியான செய்திகளில் இருந்து தான் தொடங்குகின்றன.

தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு போலியான செய்தி குறித்து காண்போம்.

1965 மற்றும் 2019 க்கு இடையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, சிங்கப்பூரில் உள்ள மனிதவள அமைச்சகத்தால் S$ 6500 பெற உரிமை உண்டு. இந்த பணியாளர் நலனைப் பெற தகுதியுள்ள நபர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சோதிக்கவும்”, என்ற தகவல் தற்போது சிங்கப்பூர் வட்டாரங்களில் அதிக புழக்கத்தில் உள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது.

அதனுடன் இந்த https://witbenefits.top/mom இணைப்பையும் கொடுத்துள்ளனர், அதை கிளிக் செய்யும் வேளையில் நாம் மோசடிக்காரர்கள் வலையில் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற அரசு துறைகள் சார்ந்த தகவல் நமக்கு கிடைக்கப்பெற்றால், அந்ததந்த துறை அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று உண்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.