ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தில் “லிட்டில் இந்தியா” தூய்மை பணி திட்டம்!

Abdul Kalam Vision Socity organised Little India Cleaning Programme

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்களின் 4 வது நினைவு தினத்தை நினைவு கூரும் விதமாக தூய்மை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்துல் கலாம் விஷன் சொசைட்டி சார்பாக NEA, LISHA மற்றும் IHB ஆகியவற்றின் பேராதரவுடன் லிட்டில் இந்தியா தூய்மை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக துப்புரவு பணிகள் நடைபெற்றது.

இந்த திட்டத்தில் லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி உறுப்பினர்கள் மூலம் தூய்மை செய்யப்பட்டது.

இந்திய மக்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் சேவையை போற்றும் விதமாக, லிட்டில் இந்தியாவை சுத்தம் செய்து சுற்றுச்சூழலை அழகு படுத்தி கொண்டாடுவோம்! என்ற முழக்கத்துடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

புகைப்படங்கள்: