ஊழியர்களை ஆள்குறைப்பு செய்யவுள்ள சிங்கப்பூர் SPH..!

About 140 employees from Singapore Press Holdings to be 'affected' by retrenchment exercise
(Photo: TODAY)

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (SPH) ஊடக விற்பனை பிரிவு மற்றும் பத்திரிகைகளைச் சேர்ந்த சுமார் 140 ஊழியர்களை ஆள்குறைப்பு செய்யவுள்ளது.

COVID-19 காரணமாக, விளம்பர வருவாயில் ஏற்பட்ட பாதிப்பு இந்த ஆள்குறைப்புக்கு காரணம் என்றும் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : புதிதாக 100 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று – பெரும்பாலோர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள்..!

பாதிக்கப்பட்ட இந்த ஊழியர்கள் ஒட்டுமொத்த ஊடகக் குழுவின் தலைமையகத்தில் எண்ணிக்கையில் 5 சதவிகிதம் ஆகும்.

ஆள்குறைப்பு செலவுகள் சுமார் S$8 மில்லியன் வரை என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆள்குறைப்பில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்குத் தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று SPH கூறியுள்ளது.

COVID-19 தொற்றுநோய் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொருளாதார வீழ்ச்சி, விளம்பர வருவாயை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg