சிங்கப்பூர் Hougang 1 ஷாப்பிங் வளாகத்திற்கு அருகே வாகன விபத்து..!

accident near Hougang 1 mall
Six, including three children, taken to hospital after accident near Hougang 1 mall (Photo: Ilham Salleh)

ஹௌகங் (Hougang) 1 ஷாப்பிங் வளாகத்திற்கு அருகே இரண்டு வாகனங்கள் மோதி விபத்து (மார்ச் 8) ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய விதிமுறை மீறல்; வெளிநாட்டு மாணவி நீக்கம்..!

ஹௌகங் ஸ்டிரீட் 91 மற்றும் ஹௌகங் அவென்யூ 9 சந்திப்பில் நடந்த இந்த சம்பவத்திற்கு, மதியம் 12.30 மணியளவில் தகவலுக்கு பதிலளித்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

இதில் 8 -10 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள், மேலும் இருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SPF தெரிவித்துள்ளது.

மேலும், 26 வயதான வாகன ஓட்டுநர் ஒருவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; மேலும் 12 புதிய COVID-19 சம்பவங்களை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்!