“தங்கும் விடுதிகளில் அரசின் பங்கு இருப்பதை உறுதி செய்ய ACE குழு நிரந்தர பிரிவாக செயல்பட உள்ளது”

ACE Group permanent division
Pic: Nuria Ling / TODAY

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ACE (Assurance, Care and Engagement) குழு நிரந்தர பிரிவாக செயல்பட உள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஏற்பட்ட கிருமித்தொற்று பரவலை கையாளுவதற்கு பணியமர்த்தப்பட்டது.

ACE குழு நிரந்தர பிரிவாக செயல்படுவதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளை நிர்வகிப்பதில் அரசின் பங்கு இருப்பதை உறுதிசெய்ய முடியும் என குழுவின் தலைவர் திரு. துங் யீ ஃபாய் (Tung Yui Fai) கூறியுள்ளார்.

சைனாடவுனில் உள்ள கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக ஆடவர் கைது

ACE குழுவில் தற்பொழுது 1,000க்கும் மேற்பட்டோர் செயல்படுகின்றனர். குழுவை நிரந்தரப் பிரிவாக்குவது வெளிநாட்டு ஊழியர்களை நிர்வகிப்பதில் அரசின் அணுகுமுறையில் உள்ள மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.

இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி நடத்துபவர்கள், முதலாளிகள் ஆகியோரின் பொறுப்புகளைக் குழு ஏற்றுக்கொள்ளாது என திரு. துங் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நம்பிக்கையை மேம்படுத்துவதன் மூலம், அவர்களுடன் மேலும் நெருக்கமாகப் பழகமுடியும் என்றும், செயல்முறைகள் குறித்து விவரிப்பதிலும், சம்பந்தப்பட்ட தரப்புகளின் ஆற்றல்களை வளர்ப்பதிலும் பங்கேற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் போலி S$10,000 பண நோட்டை பயன்படுத்தியதாக 3 பேர் கைது