வேலையிட விபத்துகளில் இருந்து ஊழியர்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்!

(PHOTO: REUTERS/Edgar Su)

புதிய AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறை, வேலையிடங்களில் ஊழியர்கள் வழுக்கி விழுவது, தடுக்கி விழுவது ஆகிய விபத்துகளை தடுக்க உதவும்.

இந்த புதிய முறையை, இந்த ஆண்டு குறைந்தது 50 நிறுவனங்களாவது செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்புவது குறையலாம்”

இத்தகைய வேலையிட விபத்துக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான காயங்களை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்ப முறை, முறையாக இயங்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் ஏற்படும் வேலையிட விபத்துகளை தடுக்க இந்த முறை உதவும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்கள் இதனை பயன்படுத்த மனிதவள அமைச்சகம் (MOM) கேட்டுக்கொண்டுள்ளது.

ஊழியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முதலாளிகள் காத்திருப்பு..!