சிங்கப்பூரில் ஏர் ஏசியா நிறுவனத்தில் “Airasia Food” உணவு சேவை..!

AirAsia food delivery Singapore
(Photo: AirAsia)

மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா, தனது உணவு விநியோக சேவையான “Airasia Food” சேவையை மார்ச் மாதம் சிங்கப்பூரில் தொடங்குகிறது.

அதன் சேவையை தொடங்க சிங்கப்பூர் அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்றுள்ளதாக ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.

பிப். மற்றும் மார்ச் மாதங்களில் சிங்கப்பூர் to திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்!

அழகு, பேஷன், புதிய தயாரிப்புகள் மற்றும் ஹோட்டல் ஆகியவற்றை தொடங்க நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.

இதன் உணவு விநியோக சேவை ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் மலேசியாவில் செயல்படத் தொடங்கியது.

இது முதல் மூன்று மாத சேவையில், 500 உணவகங்களுடன் சுமார் 15,000 டெலிவரி ஆர்டர்களை வழங்கியது.

ஏர் ஏசியா உணவு நிறுவனம், பூஜ்ஜிய-கமிஷன் முறையில் இயங்குகிறது.

சிங்கப்பூரில் தற்போது Foodpanda, Deliveroo மற்றும் GrabFood ஆகியவை மூன்று முக்கிய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

S Pass வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு குறைப்பு – ஆய்வாளர்கள் கருத்து