சிங்கப்பூரில் இறந்து கிடந்த செய்தித்தாள் போடும் ஊழியர் – போலீஸ் விசாரணை

aljunied-car-park-deceased-man
Shin Min Daily News

சிங்கப்பூரில் 55 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் தனது வேனில் இறந்து கிடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

பிளாக் 119 அல்ஜூனைட் அவென்யூ 2ல் உள்ள திறந்தவெளி கார் பார்க்கிங்கில் நேற்று முன்தினம் (செப்.21) பிற்பகல் 3.20 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்… மருத்துவமனையில் அனுமதி

இறந்த அந்த ஆடவர் செய்தித்தாள் நியூஸ்பேபர் விற்பனையாளர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கார் நிறுத்துமிடத்தின் ஒரு மூலையில் வேன் நிறுத்தப்பட்டதாகவும், அதனால்தான் யாரும் முன்னதாகவே எதையும் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் சிலர் அவர் வாகனம் நிறுத்தியது குறித்து கூறியுள்ளனர். மேலும், அவரின் மனைவியும் சம்பவ இடத்திற்கு வந்து தன் கணவனை கண்டு கண்ணீர் விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

காலநிலையைப் பொருட்படுத்தாமல் அவர் சரியான நேரத்தில் செய்தித் தாள்களை டெலிவரி செய்வார் என்று ஒருவர் கூறினார்.

விசாரணைகள் தொடர்வதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களாக 21 முதல் 25 வயதுடைய இளைஞர்கள்!