அனைத்து குடும்பங்களுக்கும் இலவச சுய பரிசோதனை கருவிகள் – நிதியமைச்சர் அறிவிப்பு.!

All households receive ART Kit
Pic: Watsons, Guardian web & MCI

சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக சுய பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத்தலைவர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

நோய்த்தொற்று குழுமங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தைகளுக்கு அருகில் வாழும் குடும்பங்களுக்கு இலவச சுய பரிசோதனைக் கருவிகள் முதலில்
விநியோகிக்கப்படும் என்றும், மற்ற குடும்பங்களுக்கு பின்னர் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் திரு. வோங் கூறினார்.

ரிவர் வேலி ஹை பள்ளியில் நடந்தது என்ன?- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த கல்வி அமைச்சர்!

சுய பரிசோதனைக் கருவிகளை பொதுவாக அனைத்து சில்லறை வர்த்தகர்களிடமிருந்தும் வாங்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரிசோதனைகள் முன்பை விட தற்போது மேலும் எளிதாகவும், மலிவாகவும் பெறமுடியும் என்பதால் பரிசோதனைகளைத் தவிர்ப்பதற்கு காரணமில்லை என அமைச்சர் திரு. வோங் கூறினார்.

சிங்கப்பூர் புதிய இயல்புநிலைக்கு மாறும் நிலையில், பரிசோதனைகளை வழக்கமாக நடத்துவதும் மேற்கொள்வதும், அனைவரையும் பாதுகாக்க உதவும் என்றும் அமைச்சர் திரு. வோங் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடு தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே..!