சிங்கப்பூரில் அனைத்து பள்ளிவாசல்களும் தற்காலிகமாக மூடல்..!

All mosques here to be closed for five days
All mosques here to be closed for five days for cleaning, Friday prayers cancelled (Photo: Straits Times)

சிங்கப்பூரில் உள்ள அனைத்து 70 மசூதிகளும் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய (மார்ச் 13) தினம் தொழுகை, சமயம் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 9 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இந்த மதம் முதல் தேதி வரை, கோலாலம்பூரில் நடந்த சமயம் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்ற சிலருக்கு COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரியின் பிற்பகுதியில் சுமார் 90க்கு உட்பட்ட சிங்கப்பூரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர், மேலும் அவர்களில் சிலர் உள்ளூரில் உள்ள சில மசூதிகளுக்கு அடிக்கடி செல்லும் உறுப்பினர்கள் என்றும் கூறப்படுகிறது

COVID-19 சம்பவங்களில் எண்ணிக்கை கணிசமான அளவு பரவுவதை தடுக்க, அனைத்து மசூதிகளும் தற்காலிகமாக மூடப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (Muis) தெரிவித்துள்ளது.

மேலும், இங்குள்ள நான்கு மசூதிகள் சுத்தம் செய்ய ஏற்கனவே மூடப்பட்டுள்ளன என்று மன்றம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு..!

அவை சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஜமே சுலியா மசூதி, ஆங் மோ கியோவில் அல் முத்தாக்கின் மசூதி, பீச் சாலையில் உள்ள ஹஜ்ஜா பாத்திமா மசூதி, சாங்கி சாலையில் உள்ள காசிம் மசூதி ஆகியவை அடங்கும்.

இதில் மார்ச் 13 அன்று எல்லாப் பள்ளிவாசல்களிலும் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விரிவுரைகள் மற்றும் சமய வகுப்புகள் போன்ற அனைத்து மசூதி நடவடிக்கைகளும் மார்ச் 27 வரை ரத்து செய்யப்படும் என்று Muis மேலும் தெரிவித்துள்ளது.

Source : Straits Times

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil