இந்த 2 வீவக பிளாக்குகளில் வசிப்போருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

Photo: Google Maps

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே வேளையில் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யாராவது ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டாலும், அந்த பிளாக்கில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, “ஆங் மோ கியோ அவென்யூ 10- ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (Housing And Development Board- ‘HDB’) பிளாக் 556-ல் (556 Ang Mo Kio Avenue 10) ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள பிளாக் 510-ல் (510 West Coast Drive) ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது” என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, சீனாவின் ஜியாங்சுவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்த நிலையில், ஆங் மோ கியோ அவென்யூ 10- ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பிளாக் 556-ல் வசிப்பவர்களுக்கான கட்டாய கொரோனா பரிசோதனை இன்று (01/08/2021) காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை 8 ஆங் மோ கியோ தெரு 54 (8 Ang Mo Kio Street 54), முன்னாள் டா கியோவோ தொடக்கப்பள்ளியில் ((Former Da Qiao Primary School) உள்ள பிராந்திய ஸ்கிரீனிங் சென்டரில் (Regional Screening Centre) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள பிளாக் 510- ல் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை இன்று (01/08/2021), அந்த பிளாக்கின் பின் புறத்தில் நடைபெறுகிறது.

இக்கட்டான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட SCDF – அமைச்சர் பாராட்டு.!

“கொரோனா பரிசோதனைகள் தொடர்பாகக் குடியிருப்பாளர்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.