சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள்..!

Annual leave eligibility and entitlement

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் விடுமுறை பெறுவதற்கான உரிமை உண்டு. நீங்கள் பணிபுரியும் கால அளவை பொறுத்து உங்களுக்கான விடுமுறை கணிக்கப்படுகிறது.

விடுமுறை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் உரிமைகள் பற்றி பார்ப்போம்

வருடாந்திர விடுப்பு தகுதி மற்றும் உரிமை:

வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தது 3 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், உங்களுக்கு வருடாந்திர விடுப்பு பெற உரிமை உண்டு.

தகுதி:

உங்கள் நிறுவன முதலாளியிடம், குறைந்தபட்சம் 3 மாதங்கள் நீங்கள் பணிபுரிந்திருந்தால், வருடாந்திர விடுப்பு பெறுவதற்கான தகுதி உங்களுக்கு உண்டு.

உரிமை:

உங்கள் வருடாந்திர விடுப்பு உரிமை என்பது, முதலாளியுடன் எத்தனை ஆண்டுகள் நீங்கள் சேவை செய்தீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். நீங்கள் பணியைத் தொடங்கிய நாளிலிருந்து உங்கள் சேவை ஆண்டு என்பது தொடங்குகிறது.

நீங்கள் 3 மாதங்களுக்கு மேல், ஆனால் ஒரு வருடத்திற்கும் குறைவாக வேலை செய்திருந்தால், நீங்கள் பணிபுரிந்த முழு மாதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விடுமுறை வழங்கப்படும்.

நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை செய்திருந்தால், உங்கள் நடப்பு ஆண்டில் நீங்கள் பணியாற்றிய முழு மாதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உங்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் அறிய: https://www.mom.gov.sg/employment-practices/leave/annual-leave/eligibility-and-entitlement