இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தை பிடிக்கும் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் செயலி..!

Another china developed app takes tiktoks place in India
Another china developed app takes tiktoks place in India

இந்தியாவில் மிகவும் பிரபலமாக காணொளி பதிவு செயலியான டிக் டாக் உட்பட சுமார் 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்தது.

அதன் காரணமாக டிக் டாக் பயன்பாட்டாளர்கள் மிகுந்த வேதனையையும், மனவருத்தத்தையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.

அது ஒருபுறம் இருக்க, பல்வேறு காணொளி செயலியின் பக்கம் டிக் டாக்கர் பார்வை திரும்பியது. தற்போது இந்தியாவில், சீனாவின் மற்றொரு செயலியான ஸ்நாக் வீடியோ செயலி பிரபலமாகி வருகிறது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை மின்னிலக்க முறையில் வழங்கும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு, அதற்கு போட்டியாக பல செயலிகள் படையெடுத்தாலும், தற்போது ஸ்நேக் வீடியோ என்ற சீன செயலி ஒன்று இந்தியாவில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஸ்நாக் வீடியோ செயலியின் அலுவலகம் சிங்கப்பூரில் இருந்து செயல்பட்டு வருகிறது, இதனை தயாரிப்பது சீனாவைச் சேர்ந்த குவஷியோ டெக்னோலஜி என்ற நிறுவனம் என்பது கூடுதல் தகவல்.

அதாவது, இது சிங்கப்பூரில் இருந்து செயல்பட்டு வருவதால், இந்தியாவில் தடை உத்தரவில் இல்லாத காரணத்தால், அங்கு அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும், சுமார் கோடியே 80 லட்சம் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து வந்த வேலை அனுமதி உடையோருக்கு தொற்று பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…