சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் விரைவு சோதனை முறை..!

Antigen rapid tests migrant workers
Antigen rapid tests (PHOTO: MOM)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கான வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில், தொற்றை விரைவாகக் கண்டறிய ஆன்டிஜென் சோதனை (Antigen Rapid Test) முறையை பயன்படுத்துவதை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த சோதனை முறை, மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சுகாதார அமைச்சின் (MOH) முயற்சியில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கியுள்ளது, மேலும் ஒரு மாதத்திற்கு இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மலேசியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவுள்ள சிங்கப்பூர்..!

Polymerase chain reaction (PCR) என்ற சோதனை முறையை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்கள், தற்போது ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் சோதனை செய்யப்படுவதாக MOM நேற்று (அக். 25) தெரிவித்துள்ளது.

இந்த ஆன்டிஜென் விரைவு சோதனை (Antigen Rapid Test), ஏழாம் நாளில் கூடுதல் சோதனையாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு துல்லியமாக இருந்தாலும், ஆன்டிஜென் சோதனைகள் அரை மணி நேரத்திற்குள் முடிவுகளைத் தரும், ஆனால் PCR சோதனை குறைந்தது ஒரு நாள் எடுத்துக்கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCM துவாஸ் லாட்ஜ் தங்கும் விடுதியில் உள்ள மொத்தம் 1,000 வெளிநாட்டு ஊழியர்கள் இந்த சோதனை முறையில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் மீது கிரேன் விழுந்து விபத்து..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…