‘பறவைகளால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள்’- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அமைச்சர்!

Photo: Google Maps

கொரோனா சூழலுக்கு மத்தியிலும் சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அந்தந்த துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் அவையில் விளக்கமளித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (02/08/2021) நடந்த அவை அலுவலின் போது, குறிப்பிட்ட இடங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (Housing and Development Board- ‘HDB’) பேட்டைகளில் பறவைகளால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

தாக்குதல் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக 18 வயதிற்குட்பட்ட 131 பேர் கைது!

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Minister Of National Develoment Desmond Lee) எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது, “பறவைகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதில், பறவைகளின் வாழ்விட மாற்றம், உணவு கிடைப்பதைக் குறைப்பது போன்றவையும் அதில் அடங்கும். மரக்கிளைகளில் காகம், மைனா உள்ளிட்ட பறவைகள் கூடுக்கட்டுவதைத் தடுக்கும் வகையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் உள்ள சில மரங்களின் கிளைகளைத் தேசிய பூங்கா கழகம் (National Parks Board) வெட்டும். அதேபோல், தேசிய பூங்கா கழகம் நகர மன்றங்களுடன் இணைந்து, பறவைகள் கூடுகட்ட ஏதுவான மரங்களுக்கு பதிலாக மற்ற வகை மரங்கள் நடப்படும்.

பறவைகளுக்கு உணவுக் கிடைப்பதைக் குறைக்க, சிங்கப்பூர் உணவு அமைப்பு, தேசிய சுற்றுப்புற அமைப்பு, நகர மன்றங்கள் உள்ளிட்டவைகளுடன் இணைந்து தேசிய பூங்கா கழகம் செயல்படுகிறது. பேட்டைகளில் சுற்றியுள்ள உணவுக் கடைகளில் உணவு கழிவுகளைச் சரியாக கையாள அவை ஊக்குவிக்கின்றன. இதன்மூலம் வருங்காலத்தில் பறவைகளால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும்” எனத் தெரிவித்தார்.

லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்

உலகில் பறவைகளும், மரங்களும் பசுமையான சுற்றுச்சூழலுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. ஒருபுறம் இவை நமக்கு நன்மையையும் ஆரோக்கியமான வாழ்வையும் வழங்கினாலும், மற்றொருபுறம் சிறிது தீமையும் இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், மரங்களின் கிளைகள் வெட்டுவது அனைவரும் வருத்தத்தை அளித்தாலும் கூட, அதனை ஈடுகட்டும் விதமாக நாம் ஒவ்வொரு வரும் மரங்களை வளர்ப்போம். வீட்டில் மாடி தோட்டங்களை அமைப்போம்; பசுமையான சுற்றுச்சூழலைக் காப்போம்!