பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட கட்டாய மரண தண்டனை – மேல்முறையீடு நிராகரிப்பு

indian-origin-singapore-jailed

தனது மரண தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பன்னீர் செல்வம் பரந்தாமன் (வயது 34) அதில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) தோல்வியடைந்தார்.

மலேசியரான அவருக்கு போதைப்பொருள் தொடர்பாக விதிக்கப்பட்ட மரண தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

தொற்று ஆபத்து அதிகமுள்ள சர்வதேச பயணிகளுக்கு கடுமையாக சோதனை – இந்தியா அலர்ட்

நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரிய அவரது விண்ணப்பம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, பன்னீர் தனது வழக்கறிஞர்களான திரு டூ ஜிங் ஜி மற்றும் திரு லீ ஜி என் ஆகியோரிடம் கண்ணாடி திரை மூலம் பேசினார்.

பின்னர், மூவரும் தலை குனிந்து அமைதியான பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (CNB) பன்னீரால் வழங்கப்பட்ட தகவல்கள், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க கணிசமான அளவில் உதவியதா என்பதை கருத்தில்கொண்டு இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தது.

சிங்கப்பூருக்கு 51.84 கிராம் ஹெராயின் கொண்டு வந்ததற்காக பன்னீருக்கு 2017ஆம் ஆண்டு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பிப்ரவரி 2018இல் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் கருணை மனுக்களை சமர்ப்பித்தனர், அதும் நிராகரிக்கப்பட்டன.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!