COVID -19: சிங்கப்பூர் அரசு வணிக நடவடிக்கைகளை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கு எடுத்துள்ள அணுகுமுறைகள்..!

DPM lawrence Wong debunks circuit breaker rumours
(Photo: Tech in Asia)

சிங்கப்பூர் வணிக தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பொருளாதாரத்தை படிப்படியாக திறப்பதில் நாங்கள் பணியாற்றும்போது மக்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் எங்களது முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த நிறுவனங்கள் மற்றும் துறைகள் முதலில் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, பொருளாதாரத்தின் முக்கியத்துவம், உள்ளூர் வேலைவாய்ப்புக்கான பங்களிப்பு மற்றும் அவற்றின் பணிநிலையங்களில் பரவும் அபாயங்களைக் குறைக்கும் திறன் போன்ற காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் புதிதாக 632 பேருக்கு COVID-19 பாதிப்பு உறுதி..!

COVID -19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்திற்குப் பாதுகாப்பான வேலை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான தூர இடைவெளி சார்ந்த நடவடிக்கைகளுடன் பொருளியல் படிப்படியாக செயல்படத் தொடங்கும்.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி திட்டம் செயல்படும் முன்னரே, வேலையிடத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் 70% குறைக்கப்பட்டிருந்தன இந்த நடைமுறை, நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான இந்தத் திட்டம் முடிவுற்ற பின்னரும் தொடரவேண்டும்.

நிறுவனங்கள் அமல்படுத்தவேண்டியவைகள்:

  • பாதுகாப்பான தூர இடைவெளி சார்ந்த நடவடிக்கைகள்
  • பாதுகாப்பான ஓய்வெடுக்கும் இடங்கள்
  • தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம்
  • அதிகம் பாதிப்படையக்கூடிய தரப்பினருக்கு பரிசோதனை
  • தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பட்ட தரநிலைகள் – குறிப்பாக, கைகள் அதிகம் படக்கூடிய இடங்கள்.

வர்த்தகத் தொடர்ச்சிக்கான நடைமுறைகளைக் கொண்டிருத்தல்:

  • வெவ்வேறு நேரங்களிலும், வேலையிடங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள், வேலை நேரத்திற்குப் பிறகு வெளியில் சந்திக்க கூடாது.

மேல்விவரங்கள்: go.gov.sg/postcb-work

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூருக்கு சுமார் 600,000 முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய சீனா…!