சைனாடவுனில் உள்ள கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக ஆடவர் கைது

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

சைனாடவுனில் ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் டெம்பிள் ஸ்ட்ரீட்டில் (Temple Street) உள்ள ஒரு கடையில் ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் போலி S$10,000 பண நோட்டை பயன்படுத்தியதாக 3 பேர் கைது

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஆடவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக SPF தெரிவித்துள்ளது.

அச்சத்தால் உறைந்துபோன பாதிக்கப்பட்ட நபர்கள், கொள்ளையில் ஈடுபட்டவரிடம் சுமார் S$1,000 பணத்தை ஒப்படைத்தனர் என்றும் SPF கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை கேமராக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபரை லோரோங் 1 தோ பாயோவில் (Lorong 1 Toa Payoh) அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கின் சாட்சியாக கத்தி மீட்கப்பட்டது என்றும் SPF கூறியுள்ளது, அந்த நபர் மீது நேற்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தொடரும் உயிரிழப்பு – மேலும் 3 பேர் கிருமித்தொற்றால் மரணம்