உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசை குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம்; இந்திய பாஸ்போர்ட் தரவரிசையில் பின்னடைவு..!

ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், இந்திய பாஸ்போர்ட் ஒரு தரவரிசை குறைந்து 82 வது இடத்தில் உள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகெங்கிலும் உள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளின் வலிமையை அளவீட்டு அதன் அடிப்படையில் ஒரு பட்டியலை வெளியிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களால் எத்தனை இலக்குகளை அணுக முடியும் என்பதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 1 ம் தேதி ஹென்லி & பார்ட்னர்ஸ் உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டு குறித்த தங்கள் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.

குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 2015 மற்றும் 2017 க்கு இடையில் வீழ்ச்சியைக் கண்டது. (2014 இல் 76 இலிருந்து 2015 இல் 88 ஆக குறைந்தது).

2018 ஆம் ஆண்டில் 81 வது இடத்திற்கு முன்னேறியது, அதே நேரத்தில் 2019 அறிக்கையில் ஒரு இடம் பின்தங்கி 82 வது இடத்தில் உள்ளது.

இருப்பினும், முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் மூன்று வளர்ந்த ஆசிய நாடுகள் உள்ளன. அதாவது ஜப்பான், சிங்கப்பூர் முதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து தென் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா 6 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.