ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் வழங்க திட்டம்!

Australian solar farm could provide 20% of S’pore’s electricity in future via undersea cables

ஆஸ்திரேலியா சோலார் ஃபார்ம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இந்த மின்சாரத்தில் 20% சிங்கப்பூருக்கு கடல் வழியாக கேபிள் மூலம் வழங்க உள்ளது.

சூரிய ஒளி மின்சார மேம்பாட்டாளர்கள் சிங்கப்பூருக்கு மின்சாரம் வழங்க உலகில் மிக பெரிய சோலார் ஃபார்ம்யை உருவாக்க திட்டம் வகுத்துள்ளனர்.

இந்த சோலார் பார்ம் ஆஸ்திரேலியா Tennant Creek பாலைவனத்தில் சுமார் 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கபட உள்ளது.

சிங்கப்பூருக்கு சுமார் 4,000 km தூரம் இந்த கேபிள் வாயிலாக மின்சாரம் கொண்டு செல்லப்பட இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோலார் ஃபார்ம் சிங்கப்பூரின் மின்சார தேவையை 1/5 என்ற விகிதத்தில் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சிங்கப்பூருக்கு 95 சதவீத மின்சாரம் இயற்கை எரிவாயு மூலமும், 2 சதவீதம் சோலார் மூலமும் கிடைக்கின்றது.