ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பள்ளி சிறுமிகள்.. கடைகளில் உள்ளாடை திருட்டு – CCTV காட்சிகளில் சிக்கிய ஐவர்

Singapore job scam money mules
File Photo : Singapore Police

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐந்து சிறுமிகள் சிங்கப்பூரில் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

அந்நாட்டில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள் கடந்த நவ.13 அன்று சிங்கப்பூருக்கு பள்ளிப் பயணமாக வந்துள்ளனர்.

ஸ்டர்லிங் சாலையில் கனமழையால் வெள்ளம்: “பழைய பாரம்பரியப் பகுதி… அக்கறை வேண்டும்” – வாசகர் கருத்து

இந்நிலையில், ஆர்ச்சர்ட் சாலையில் கடையில் திருடியதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கூறப்பட்டுள்ளன.

மாணவர்கள் மெல்போர்னுக்கு வடக்கே அமைந்துள்ள Bacchus Marsh Grammar என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் அங்கு ஆண்டுக்கு A$13,000 (S$11,995) கட்டணம் என்றும் NCA Newswire தெரிவித்துள்ளது.

செய்தி அறிக்கைகளின்படி, அவர்கள் மாண்டரின் கேலரியில் உள்ள விக்டோரியாஸ் சீக்ரெட் கடையில் இருந்தும், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள Crocs கடையிலிருந்தும் பொருட்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

விக்டோரியாஸ் சீக்ரெட்டில் விலை உயர்ந்த உள்ளாடைகளை பதுக்கி வைத்துவிட்டு பணம் கொடுக்காமல் வெளியேறுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக டெய்லி மெயில் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவர்கள் மாண்டரின் கேலரி ஷாப்பிங் மாலில் இருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் – பயணிகளுக்கு ஆலோசனை