குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த சந்தேகத்தின்பேரில் குழந்தைப் பராமரிப்பாளரிடம் விசாரணை..!

Babysitter on trial for poisoning 2 babies says she did not give them drugs though she had some in her house
Babysitter on trial for poisoning 2 babies

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததாக சந்தேகத்தின்பேரில், குழந்தை பராமரிப்பாளர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட 38 வயதான செவிலியர் சாதியா ஜமாரி (Sa’adiah Jamari), ஐந்து மாத குழந்தை மற்றும் 11 மாத குழந்தைக்கு தனித்தனியான 2016ஆம் ஆண்டில் விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய இருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

தங்கள் குழந்தைகள் மயக்கமடைந்தததை அடுத்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நச்சுயியல் அறிக்கைகளில், இளைய குழந்தைக்கு 10 மருந்துகளும், வயதான குழந்தைக்கு ஆறு மருந்துகளும் கண்டறியப்பட்டது.

இதில் தூக்க மாத்திரைகள் மற்றும் பிற மாத்திரைகள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் தாய் Facebook பதிவில் அவரை பற்றிப் புகார் செய்து பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணை இன்று தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷம் கொடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், சாதியாவை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து அபராதம் விதிக்கலாம். அவர் பெண் என்பதால் ரம்படித் தண்டனை விதிக்கப்பட மாட்டாது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg