சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட மருத்துப்பொருளை கொண்ட 2 தயாரிப்புகள் – HSA..!

Banned substance found in 2 'slimming products' sold online: HSA
Banned substance found in 2 'slimming products' sold online: HSA (Photo: Health Sciences Authority)

கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட பொருளைக் கொண்டிருப்பதாக இரண்டு எடை குறைப்பு தயாரிப்புகள் குறித்த எச்சரிக்கையை சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) வெளியிட்டுள்ளது.

Serifa Beauty Solidmolid எனும் சாக்லேட் பானம், LKS Coffee ஆகியவற்றில் “sibutramine” என்னும் மருந்துப் பொருள் கலந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் பட்டியலில் 6 இடங்கள் சேர்ப்பு..!

இதில் Serifa Beauty Solidmolid பயன்படுத்தியதை தொடர்ந்து நுகர்வோர் ஒருவருக்கு விரைவான இதயத் துடிப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் LKS காபியை பயன்படுத்திய நுகர்வோர் ஒருவர் திடீர் எடை இழப்பு மற்றும் பசியின்மை ஆகியவற்றை சந்தித்ததாக HSA தெரிவித்துள்ளது.

ஆணையம் மேற்கொண்ட சோதனைகளில் தயாரிப்புகளில் தடைசெய்யப்பட்ட பொருள் “sibutramine” இருப்பது தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட அந்த மருந்துப் பொருள், ஆரோக்கியத்துக்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

எடை குறைப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தாக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது, ஆனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் காரணமாக சிங்கப்பூரில் 2010 முதல் இது தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அவைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படி மின்வணிகத் தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களை விற்பனை செய்வோருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் / அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று HSA எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : GE2020: சிங்கப்பூரில் பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறுகிறது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg