கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் – ஒப்பந்த ஊழியர் மீது குற்றச்சாட்டு

BCA contract staff charged bribe
( Photo: Shutterstock )

ஆய்வில் சாதகமாக செயல்பட S$600 லஞ்சம் கேட்டு பெற்றதாக, முன்னாள் கட்டிட மற்றும் கட்டுமான ஆணையத்தின் (BCA) ஒப்பந்த ஊழியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் ஆணையத்தின் தற்காலிக ஆய்வு அதிகாரியாக இருந்த டான் மிங் லை, கடந்த ஆண்டு மற்றொரு நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

மானபங்கப்படுத்தியதாக வெளிநாட்டவர்கள் உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டு

நேற்று (27 ஆகஸ்ட்), ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6 (a)இன் கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அன்று, 69 பெகோனியா டிரைவில் உள்ள டொமைன் டிரேடிங் & கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவன பொது மேலாளரிடம் டான் லஞ்சம் பெற்றார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

ஊழல் குற்றம் புரிந்த எவருக்கும் S$100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

COVID-19: சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மூன்று பேர் மரணம்.!