பிரம்மாண்ட நட்சத்திர மீன் வடிவில் அமைக்கப்பட்டுள்ள பெய்ஜிங் விமான நிலைய திறப்பு விழா!

Beijing's starfish shaped mega airport

பெய்ஜிங்கில் மிகப் பிரமாண்டமான நட்சத்திர மீன் வடிவில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘பெய்ஜிங் டேசிங் சர்வதேச விமான நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் 70 ஆண்டுகால ஆட்சியை நினைவு கூறும் விதமாகவும், அதைப் போற்றும் வகையிலும் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி இந்த விமான நிலையம் திறக்கப்பட இருக்கிறது.

சீன தலைநகர் பெய்ஜிங்யில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விமான நிலையம் சுமார் $17.47 பில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை உலக புகழ்பெற்ற இராகி- பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் சாகா ஹாதிட் வடிவமைத்துள்ளார்.

விமான நிலைய கட்டுமான இறுதியில் சுமார் 7 ஓடு பாதைகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2021 ஆம் ஆண்டில் சுமார் 45 பில்லியன் மற்றும் 2025 இல் சுமார் 72 மில்லியன் பயணிகள் வந்து போக கூடிய அளவிற்கு திறன் கொண்டதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.