உலகின் சிறந்த தலைவருக்கான விருதைப் பிரதமர் லீக்கு வழங்கும் அமெரிக்க சமய நல்லிணக்கக் குழு…

அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட சமய நல்லிணக்கக் குழு ஒன்று, இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த தலைவருக்கான விருதை பிரதமர் லீ சியென் லூங்கிற்கு வழங்கவிருக்கிறது.

நியூயார்க்கில் நடைபெறும் விருதளிப்பு விருந்து நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான Rabbi Arthur Schneier, பிரதமருக்கு அந்த விருதை வழங்குவார். Appeal of Conscience அறக்கட்டளை வரும் செப்டம்பர் 23ஆம் தேதி திரு. லீக்கு அந்த விருதை வழங்க இருக்கிறது.

பல இனங்களும் இணக்கத்துடன் அதேவேளையில் அவற்றின் தனித்தன்மைகளை இழக்காமல் வாழும் சமுதாயத்தைப் பேணுவதை அங்கீகரித்துத் திரு. லீக்கு அந்த விருது வழங்கப்படுவதாக அறக்கட்டளை குறிப்பிட்டது.

Credits : Straits Times