வறுமையில் உள்ள மியான்மர் பள்ளி குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டிய MoBike, Ofo மற்றும் OBike!

bikes from Singapore, Malaysia get Myanmar kids to school. (Photo: AFP/Ye Aung THU)

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் MoBike, Ofo மற்றும் OBike நிறுவன சைக்கிள்கள் சேகரிக்கப்பட்டு மியான்மர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த மூன்று நிறுவனங்களும் சிங்கப்பூரில் இருந்து வணிக தொடர்பை முடித்து கொள்வதால், மீதமுள்ள சைக்கிள்களை மியான்மர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியது.

மியான்மர் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், படிப்பில் கவனம் செலுத்தவும் இந்த உதவி பயனுள்ளதாக இருக்கும், என்று நம்புவதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 10000 சைக்கிள்கள் நேரடியா அவர்கள் இடத்திற்கே கொண்டு சேர்க்கப்பட்டன.

இந்த உதவிக்கு பின்னர் Yangon பகுதி Nhaw Kone கிராம பள்ளி சிறுமி கூறுகையில், “நான் இனி அதிக நேரம் படிப்பேன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவேன்”, என்று கூறினார்.

மியான்மரை பொறுத்தவரை 55 சதவீத குழந்தைகள் வறுமையில் வாழ்வதாக UNICEF மதிப்பீடு செய்துள்ளது. மேலும் 17 வயது நிரம்பியயோர் படிப்பறிவு குறைவாகவோ அல்லது கம்மியாகவோ பருவ வயதை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.